15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
அதேபோல தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.





