நாட்டிலேயே முதன்மை மாநிலமாக கர்நாடகாவை மாற்றுவோம் : பிரதமர் மோடி பேச்சு
நாட்டிலேயே முதன்மை மாநிலமாக கர்நாடகாவை மாற்றும் திட்டம் பாரதிய ஜனதாவிடம் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி சித்திரைத் துர்கா என்ற இடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்பொழுது கர்நாடகாவில் நவீன உட்கட்டமைப்பு பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டத்தில் அதிக கவனம் செலுத்துவது, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியை மாநில மொழியில் வழங்குவது உள்ளிட்டவற்றிலும் பாரதிய ஜனதா அதிகம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
பாரதிய ஜனதா வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை சிறந்தது என்று கூறிய மோடி கர்நாடகா மாநிலத்தில் நாட்டிலேயே முதன்மையானதாக மாற்றுவதற்கான திட்டங்களில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் சமூக நீதி மற்றும் சமூக அதிகாரம் உள்ளிட்டவை உறுதி செய்யும் முன் எப்போதும் இல்லாத அளவில் செயல்பட்டு வருவதாக பிரதமர் பேசினார். ஏழைகளின் நலனுக்கு தங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





