--- --:--:-- --

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மத்திய பாதுகாப்பு படை வீரர் கைது..!

1

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மத்திய பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு சென்ற  பெங்களூருவை சேர்ந்த வாசுகி என்ற பெண் தனது குழந்தைகளுடன் பயணம் செய்தார்.

 

அதே ரயிலில் பயணித்த மத்திய பாதுகாப்பு படை வீரரான சுரேஷ் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உடனடியாக அந்த பெண் கூச்சலிட்டதால் சகப் பயணிகள் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அதன் பேரில்   காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon