பாஜகவில் இருந்து விலகுகிறேன் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர்
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் பாஜக மீண்டும் சீட் வழங்கவில்லை. இதனால், கடந்த சில வாரங்களாக தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்து வந்த ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என கூறியிருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




