--- --:--:-- --

மரத்தின் உச்சியில் ஏறி போலீசை கதறவிட்ட திருநங்கை..!

5

கேரள மாநிலத்தில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து திருநங்கை ஒருவர் மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

 

அங்குள்ள பகுதியைச் சேர்ந்த திருநங்கை, அண்ணா ராஜவேலை திருநங்கைகள் தாக்கியதாகவும் இது தொடர்பாக ஆழ்வார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

 

இதனால் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறிய திருநங்கை சுமார் 30 அடி உயரத்தில் உள்ள கிளையில் அமர்ந்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு ஏணி மூலமாக அவர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon