தனிக்குடித்தனம் வர சம்மதிக்காததால் விரக்தி அடைந்த இளம் பெண் எடுத்த முடிவு..!
சென்னை குரோம்பேட்டையில் திருமணமான இரண்டே வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சமைச்சி பாளையம் பகுதியை சேர்ந்த சிண்ட்ரெல்லா – நவீன் குமார் தம்பதியினருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
சிண்ட்ரல்லா ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் நவீன் குமார் சேலத்தில் கொத்தனார் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே குரோம்பேட்டையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு வந்து சென்ற நிலையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கணவர் தனிக்குடித்தனம் வர சம்மதிக்காததால் மன உளைச்சலில் சிண்ட்ரல்லா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





