பாட்டி வீட்டிற்கு சென்ற இரட்டை சகோதரிகள் குட்டையில் விழுந்து பலி..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி பாறை குட்டையில் குளித்துக் கொண்டிருந்த இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்ட கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் – அழகு தம்பதியினரின் 13 வயதான இரட்டை சிறுமிகளான சஹானா, சமிதா இருவரும் பாட்டி வீட்டிற்கு கோயில் திருவிழாவிற்காக சென்றுள்ளனர்.
இருவரும் வீட்டருகே உள்ள குட்டையில் குளிக்க சென்று வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பாட்டி அவரை தேடிச் சென்றுள்ளார். அங்கு குளிப்பதற்காக எடுத்துச் சென்ற கப் மட்டுமே இருந்ததால் சந்தேகம் அடைந்தவர் ஊர் மக்களை அழைத்து தேடினார்.
இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இருபது சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





