2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மருமகளை கொன்ற மாமனார்..!
நெல்லையில் தன் இரண்டாவது திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மருமகளை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார். கிட்டேரியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய நிகழ்ச்சிகள் மேற்கொண்டு வந்துள்ளார்.
இதற்காக வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்ட நிலையில் மகன் தமிழரசனும் அவரது மனைவியும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழரசன் வெளியே சென்றிருந்த நிலையில் ஆத்திரத்துடன் வீட்டிற்கு வந்த மாமனார் தங்கராஜ் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து முத்துமாரியம்மன் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்த முத்துமாரி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





