ஆபத்தை உணராமல் டிராக்டரை இயக்கிய சிறுவன்..!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 6ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஆபத்தை உணராமல் டிராக்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியான நிலையில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கேஜி ஊராட்சி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை மாநில நெடுஞ்சாலையில் சிறுவன் ஓட்டி வருவதும் அதில் மேல் இரண்டு சிறுவர்கள் அமர்ந்திருப்பதும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற செயல்களை பெற்றோரும் காவல்துறையினரும் ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வியும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





