அடுத்தடுத்து அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று காலை மற்றும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவானது.
நேற்று ஒரே நாளில் நான்கு முறை நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று நான்கு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் அதிக பட்சமாக ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





