நெல்லை புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்.!
நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சரவணன் பாத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அதையடுத்து நெல்லை மாவட்டம் புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் அறிவிக்கப்பட்டு இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது பேசியவர் காவல்துறையின் நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டே இருக்கும் என்றும் மாவட்டத்தில் ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





