--- --:--:-- --

காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன்..!

7

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டு செத்துப் போ என்று திட்டி விரட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த பிரபாவதி என்ற அந்த மாணவி எழுதி வைத்த கடிதத்தில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை காதலித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மூன்று மாத கர்ப்பமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

கர்ப்பமாக இருப்பதை குறிப்பிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட பொழுது அதற்கு மறுப்பு தெரிவித்த ஆனந்தராஜ் அவரது சகோதரர்கள் மற்றும் அண்ணி ஆகியோர் சேர்ந்து கொண்டு செத்துப் போ என்று கூறி பிரபாவதியை விரட்டி அடித்துள்ளனர்.

 

கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஆனந்தராஜ் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon