--- --:--:-- --

கார் மோதியதில் தந்தை கண்முன்னே மகன் துடிதுடித்து இறந்த சம்பவம்..!

6

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அலட்சியமாகவும் வேகமாகவும் கார் பின்னோக்கி இயக்கப்பட்டதால் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

 

அந்தியூர் அருகே விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த முத்துசாமி ராஜேஸ்வரி தம்பதிக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் தருண் மற்றும் தனிஷ் ஆகிய மகன்கள் இருந்தனர்.

 

இன்று மதியம் சிறுவர்கள் இருவர் அவரது பாட்டி ஜோதிமணி, தாய்மாமன் கனகராஜ் ஆகியோர் ஜோதி மணியின் தாயாரை சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காரை கனகராஜ் ஓட்டிய நிலையில் மருத்துவமனை சென்றடைந்ததும் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு உள்ளே சென்று வெங்கடம்மாளை அவர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

 

சிறிது நேரம் கழித்து கனகராஜ் வெளியே வந்து காரை திருப்பி நிறுத்த பின்னோக்கி எடுத்துள்ளார். அப்பொழுது மருத்துவமனையில் போர்டிகோவில் நின்ற சிறுவர்கள் தனிஷ் மற்றும் தருண் மீது மோதிய அந்த கார் பின்னால் நின்ற மருத்துவரின் கார் மீது பலமாக மோதி நின்றது.

 

இதில் கார்களுக்கு இடையே சிக்கிய தனிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காயங்களுடன் மீட்கப்பட்ட தருண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon