--- --:--:-- --

தானாக பால் கரக்கும் பசுமாடு..!

5

திருக்கோவிலூர் அருகே பசு மாட்டின் மடியில் இருந்து தானாக பால் சுரக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயம் செய்து வருபவர்.

 

தனது வீட்டில் பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவரின் மனைவி வழக்கம் போல் பசுமாட்டை பால் கறக்க சென்றுள்ளார். அப்பொழுது பசு மாட்டின் மடியில் இருந்து பால் தானாக வந்து கொண்டதை பார்த்து உடனடியாக ஒரு சில்வர் பாத்திரத்தில் அதனை பிடித்துள்ளார்.

 

அரை லிட்டர் பால் தானாகவே பசு மாட்டின் மடியில் இருந்து வந்துள்ளது. இந்த நிகழ்வை கேள்விப்பட்ட கிராம மக்கள் அந்த பசுமாட்டினை ஆர்வமுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon