கண்ணாடியை உடைத்து திமுக உறுப்பினர்கள் அராஜகம்..!
கொள்ளிடம் அருகே கான்கிரீட் இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்த திமுக வார்டு உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் தாண்டவன்குளம் பகுதியில் புதிதாக இணைப்பு சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. அப்பொழுது திமுக வார்டு உறுப்பினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கான்கிரீட் கலவை இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





