தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் வந்திருப்பதால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.






