--- --:--:-- --

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி வேன் ஓட்டுநர்..!

8

ண்ருட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் கச்சராக்குப்பத்தை சேர்ந்த புகழேந்தி என்பவர் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

 

இவர் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்தவர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து புகழேந்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon