--- --:--:-- --

புற்றுநோயால் தவித்த தாய்..செய்வதறியாது மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட மகன்..!

4

ரோட்டில் புற்றுநோயால் தாய் அவதிப்படுவதை கண்டு மனம் உடைந்த மகன், தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே செல்லப்பா நகரை சேர்ந்த கணவரை இழந்த சம்பூரணத்திற்கு உதயகுமார், நந்தகுமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

உதயகுமார் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில் லாரி ஓட்டுனராக பணியாற்றும் நந்தகுமாருக்கு திருமணமாகவில்லை. அவர் தாயுடன் வசித்து வந்துள்ளார். சம்பூரணம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரிய வந்த நிலையில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வந்துள்ளது.

 

தாயின் வலியை காண முடியாமல் தவித்த நந்தகுமார் மனவேதனையில் இருந்துள்ளார். நேற்று காலை உதயகுமார் தாயை பார்க்க வீட்டிற்கு வந்து விட்டு இரவு கிளம்ப முற்பட்டுள்ளார். ஆனால் நந்தகுமார் அவரை கட்டாயப்படுத்தி இருக்க வைத்தார்.

 

தொடர்ந்து இன்று காலை உதயகுமார் மனைவி சாந்தி சமையல் செய்ய எழுந்து சம்பூரணத்தையும், நந்தகுமாரையும் எழுப்பிய பொழுது தான் இருவரும் மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon