தமிழகத்தை அதிர வைத்த போலி டாக்டர் பட்டம்..இருவர் புழல் சிறையில் அடைப்பு..!
போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் மகாராஜன் ஆகிய இரண்டு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆம்பூரில் இருந்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பரை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றக் குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பாக நள்ளிரவு ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





