--- --:--:-- --

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் திணறல்..!

9

ர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் திணறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிபேடை முறைப்படி அமைக்காததால் சிரமம் ஏற்பட்டதாக விமானி தகவல் அளித்துள்ளார்.

 

குல்பர்கா மாவட்டத்தில் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க எடியூரப்பா சென்றுள்ளார். அப்போது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக ஜெயவர்க்கி பகுதியில் பிரத்தியேக ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

 

அப்பொழுது விமான நிலைய ஹெலிகாப்டரை தரையிறக்க முடியாமல் போராடினார். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு ஹெலிகாப்டரை பாதுகாப்பாக விமானி தரை இறக்கினார். முறையான விதிமுறைகளை பின்பற்றி அமைக்கப்படவில்லை என விமானி தகவல் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon