பேராசிரியர் செய்த அதிர்ச்சி செயல்..கோவப்பட்டு தட்டி கேட்ட மாணவனுக்கு கத்தி குத்து..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கல்லூரி மாணவிக்கு தவறான முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை தட்டி கேட்ட மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு தவறான முறையில் செல்போனின் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அதே கல்லூரியில் பயிலும் மாணவர் திலிக்குமார் பேராசிரியரிடம் தட்டி கேட்டதாக சொல்லப்படுகிறது.
அருளரசன் என்பவர் மாணவர் திலீப் குமாரை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பியோடி உள்ளான். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






