பள்ளிக்கு செல்வதை தடுக்க சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கும் மர்ம நபர்கள்..!
ஈரானில் பெண் குழந்தைகள் பள்ளி செல்வதை தடுக்க மர்ம நபர்கள் சிறுமிகளுக்கு விஷம் கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பேசிய ஈரானியத் துறை அமைச்சர் ஒருவர் புனித நகரமான ஈரானில் சிலர் பெண் குழந்தைகள் பள்ளிகளில் இடைநிறுத்தும் வகையில் சிறுமிகளுக்கு மர்ம நபர்கள் விஷம் கொடுத்து வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து நூற்றுக்கணக்கான சிறுமிகள் பாதிக்கப்பட்டதாகவும் சிலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை சுகாதார அமைச்சர் சிறுமிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்டதை மறைமுகமாக தெரியப்படுத்தினார்.
ஆனால் இது சம்பந்தமாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அரசிடம் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
நீதித்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி பெண் கைது செய்யப்பட்டது மர்ம மரணம் அடைந்து போராட்டங்கள் வெடித்ததற்குப் பிறகு இதுபோன்ற சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





