ஜெயலலிதா பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சசிகலா..!
அதிமுகவை ஒன்றிணைத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி காண்போம் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை மேடவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் வி.கே.சசிகலா பங்கேற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். அப்போது பேசியவர் தொண்டர்களின் விருப்பப்படி அதிமுக விரைவில் ஒன்றிணையும் என குறிப்பிட்டார்.
அதிமுகவை பொறுத்தவரை தனிநபர் ஒருவரால் முடிவெடுக்க முடியாது என்றும் கீழ்மட்ட தொண்டர்களின் முடிவு தான் இறுதியானது எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





