குவியும் புகாரால் செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் அதிரடி..!
தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் சேவையின் தரம் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்ட நிலையில் சேவையின் தரம் குறித்தும் தொடர்ச்சியாக புகார்கள் குவிகின்றனர்.
குறிப்பாக அழைப்பு பாதியில் துண்டிக்கப்படுவது, சிக்னல் கிடைக்காமை, கட்டண குளறுபடி பிரச்சினைகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் செல்போன் சேவை நிறுவனங்கள் தங்கள் சேவையின் தரம் குறித்து மாநில வாரியாக அறிக்கை வழங்க ட்ராய் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் சேவை தரம் குறித்த கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கவும் ட்ராய் திட்டமிட்டுள்ளது. அழைப்புகள் பாதியில் துண்டிக்கப்படும் பிரச்சனைக்கு நிர்வாக ரீதியாகவும் அடிப்படையாக உள்ள சிக்கல்களும் தான் காரணம் என்று இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





