மதுபோதையில் காவலர் மீது தாக்குதல்..!
சென்னையில் மது போதையில் அரை நிர்வாணமாக போக்குவரத்து இடையூறு செய்தவரை அப்புறப்படுத்தி போக்குவரத்து காவலரை தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
அண்ணாமலை போக்குவரத்து பிரிவு காவலர் முத்து பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அரும்பாக்கத்தில் அனுமதி இல்லாத மதுபானம் அருகே போதை நபர் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதை பார்த்தார்.
உடனடியாக அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த பொழுது அங்கு ஸ்கார்பியோ காரில் வந்த உரிமையாளர் கண்ணன் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அங்கிருந்த பொதுமக்கள் தட்டி கேட்டதும் காரில் ஏறி கண்ணன் தப்பிச் சென்றார். இது குறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.





