--- --:--:-- --

பணத்திற்காக நான்கு பேரிடம் கைமாறிய பச்சிளம் குழந்தை..!

7

டலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தையை விற்பனை செய்த வழக்கின் விசாரணையை பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடலூர் மாவட்டம் பெரிய குட்டு பகுதியில் உள்ள மசூதி முன்பு பிரியா மற்றும் நடராஜன் தம்பதி யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளனர்.

 

இதில் பிரியா கர்ப்பமாக இருந்த நிலையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குடும்ப வறுமை காரணமாக பிறந்த குழந்தையை நந்தினி என்பவரிடம் விற்பனைக்காக கொடுத்துள்ளனர். இதில் தனது உறவினரின் மூலம் வடலூர் பகுதியில் வசிக்கும் சித்த மருத்துவரான மெஹர்நிஷாவிடம் குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு நந்தினி விற்பனை செய்துள்ளார்.

 

இந்த நிலையில் குழந்தையை பெற்றுக் கொண்ட மருத்துவர் சுடர்விழி என்பவரிடம் மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்த விசாரணையை ஏற்கனவே மூன்று பெண்கள் உட்பட நால்வரை போலீசார் கைது செய்த நிலையில் தலைவராக இருந்த நந்தினி மற்றும் மற்றொருவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon