--- --:--:-- --

youtube சேனலை தொடங்கக்கூடாது என அரசு அதிரடி உத்தரவு..!

10

அரசு ஊழியர்கள் youtube சேனல்களை தொடங்க கேரளா அரசு தடை விதித்துள்ளது. கேரளாவில் அரசு ஊழியர்கள் youtube சேனல் தொடங்குவதற்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கும் தடைவிதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

youtube சேனல் தொடங்க அனுமதி கோரி தீயணைப்பு படை ஊழியர் ஒருவர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

அரசு ஊழியர்கள் youtube சேனல்களை தொடங்குவது சந்தாதாரர்களின் அடிப்படையில் நிதி ஆதாயம் பெரும் செயல் என்பதால் சட்டத்திற்கு எதிரானது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் சில அரசுத்துறைகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon