ஓடும் காரில் பாட்டியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுமி..!
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 6 வயது சிறுமி தனது பாட்டியை தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரில் சென்று கொண்டிருந்த பொழுது பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி முன் இருக்கையில் இருந்த பாட்டியின் முதுகில் துப்பாக்கி எடுத்து அழுத்திய பொழுது தவறுதலாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டி மேல் குண்டு பாய்ந்தது.
இதில் நல் வாய்ப்பாக அந்த மூதாட்டி உயிர் பிழைத்த நிலையில் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





