--- --:--:-- --

பிரபல திரையரங்கின் பாப்கானில் கிடந்த கரப்பான் பூச்சி..!

4

திருச்செந்தூரில் திரையரங்கில் வாங்கிய பாப்கானில் கரப்பான் பூச்சி இருந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா திரையரங்கில் திரைப்படம் வெளியாகியுள்ளது.

 

இந்த திரையரங்கில் படம் பார்க்க சென்ற மகாதேவி என்பவர் இடைவெளியின் பொழுது திரையரங்குகளில் பாப்கான் வாங்கியுள்ளார். அப்பொழுது பாப்கானில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் திரையரங்க நிர்வாகம் மற்றும் கேண்டின் ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.

 

ஆனாலும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தன்னை தகாத வார்த்தையால் திட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த திரையரங்கு தரம் அற்ற தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon