--- --:--:-- --

இனி வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்..!

12

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பூத் ஸ்லிப் பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை குறித்த 12 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னர் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க முடியாத வாக்காளர்கள் அவர்களின் அடையாளத்தை மெய்பிப்பதற்காக பிற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

அதன்படி வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்புக் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon