--- --:--:-- --

ஆன்லைன் கேம் விளையாடி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்..!

13

சென்னையில் ஆன்லைன் விளையாட்டில் ஆசை காட்டி பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னைக்கு கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினரான கார்த்திக் என்ற இளைஞர் செல்போனில் பப்ஜி விளையாட கற்றுக் கொடுத்துள்ளார். ஆன்லைன் விளையாட்டில் சிறுமியை அடிமையாக்கிய கார்த்திக் ராகவன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

 

சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்துக் காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரிய வர இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

ஆனால் அப்பொழுது காவல் ஆய்வாளராக இருந்த அமுதா என்பவர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்தவுடன் சிறுமியின் தாயை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு சிறுமியின் தாய் எடுத்துச் சென்றுள்ளார். நீதிமன்றம் விசாரணை நடத்திய பொழுது கார்த்திக் ராகவன் பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதி செய்ததை அடுத்து அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

 

Right Menu Icon