இனி 5 நாட்களில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு செய்யப்படும் – அமித்ஷா
உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்கள் இருக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லி காவல்துறை நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் டெல்லி காவல்துறை பல்வேறு முன்னேற்றங்களை சந்தித்துள்ளதாகவும் வழக்கமாக பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகள் காவல்துறையினரால் மேற்கொள்ள 15 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் இணைய வழியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் 5 நாட்களில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் நாட்களில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வர இருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.






