--- --:--:-- --

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் என அறிவிப்பு..!

2

குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 11 வகையான பணிகளுக்கு 7,031 பேரை தேர்வு செய்ய கடந்தாண்டு ஜூலை 24ஆம் நாள் குரூப் 4 தேர்வுகள் நடைபெறுகிறது.

 

இந்நிலையில் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்வு குறித்து வெளியாகும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கேட்டு கொண்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon