கல்லூரி வளாகத்தில் ஆசிரியரின் சடலம்..!
நெல்லையில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கல்லூரி வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்த போது கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கிடந்துள்ளது. தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் குறித்த விசாரணை நடத்தியதில் பேட்டை பகுதியை சேர்ந்த சுடலை முத்து என தெரிய வந்தது. இவர் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





