--- --:--:-- --

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு..!

7

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் எலகரகள்ளி கிராமம் அருகே இரவு உணவை தேடி வந்த காட்டு யானை ஒன்று மின்சார வேலியை தனது தும்பிக்கையால் பிடிக்க முயன்றுள்ளது.

 

அப்பொழுது யானையின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon