--- --:--:-- --

google அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

6

மும்பையில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கு போதை ஆசாமி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மும்பை நகரில் உள்ள பிரபல google நிறுவனத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர் google நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

இதை தொடர்ந்து அந்த அலுவலகம் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடிய பின் எதுவும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் ஆராய்ந்தனர். ஆராய்ந்ததில் அவர் குடிபோதையில் உளறி உள்ளார் என தெரிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon