லிப்டுக்குள் விழுந்த 15 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி..!
டெல்லியில் தனியார் தொழிற்சாலை லிப்டில் 15 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொழிற்சாலையில் சிறுவன் ஒருவன் லிப்ட்டில் வேலை செய்து கொண்டிருந்தான். அதில் லிஃப்ட் கதவுகள் இல்லாமல் இருந்து வந்துள்ளது.
சிறுவன் திடீரென லிஃப்ட் உள் பகுதிக்கு விழுந்துள்ளான். அப்பொழுது லிப்ட் மேலே வர சிறுவன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





