தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் ஆறாவது நாளாக போராட்டம்..!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் ஆறாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 250க்கும் ஏற்பட்ட விசைப்படகுகள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.
இந்த நிலையில் விசை படைகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க திரும்பவும் தொழிலாளர்களிடம் 10 விழுக்காடு வட்டப்பணம் பிடித்தம் செய்யப்படுவதாக புகார் கூறுகின்றனர்.
எனவே ஆறு விழுக்காடு மட்டுமே வட்ட பணம் பிடிக்க செய்ய வேண்டும் எனக்கூறி ஐந்து நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை துணை ஆட்சியருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்தம் மீண்டும் தொடர்கிறது.





