--- --:--:-- --

மாணவர்களை டீ வாங்கி வர சொல்லி அனுப்பிய ஆசிரியர்கள்..!

5

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டடப்பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு டீ கொடுக்க ஆசிரியர்கள், மாணவர்களை டீ வாங்க டீக்கடைக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

 

இதனால் டீக்கடையில் இருந்த மக்கள் கோபமடைந்து மாணவர்களிடத்தில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இது குறித்து பள்ளி கல்வித்துறைக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon