கல்லூரி முதல்வரே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம்..!
கர்நாடகாவில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கில் கல்லூரி முதல்வரே மாணவி பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்பு 17 வயது பெண் ஒருவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவிகள் போலீசுக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் கடும் திருப்பமாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் தனியார் பல்கலைக்கழகத்தின் முதல்வராக இருந்தவர் அலி. இவர் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த கல்லூரியை விட்டு வேறு கல்லூரியில் சேர நினைத்ததாக கூறப்படுகிறது. அப்படியென்றால் நாம் மாட்டிக் கொள்வோம் என எண்ணி அச்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் மாணவியை தனது அறைக்கு அழைத்து கொலை செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





