பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி அனுப்பிய கடிதம்..!
காஷ்மீர் பண்டிட்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து தப்பி ஓடிய காஷ்மீர் பண்டிட் ஊழியர்களை மீண்டும் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பி வேலையை தொடர கட்டாயப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு நிலை சரியாக இல்லாத பொழுது அவர்களை திருப்பி பணிக்கு அனுப்புவது கொடூரமான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பண்டிட் ஊழியர்களை மாற்று பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் காஷ்மீர் பண்டிட்களின் பாதுகாப்பை மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.






