தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதா..?
பிப்ரவரி ஒன்றாம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனவே இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.






