--- --:--:-- --

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் ஏடிஎம், பணம் திருட்டு..!

6

கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிகளிடம் ஏடிஎம் அட்டைகள் மற்றும் பணத்தை திருடியதாக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான கலைச்செல்வி தாயாருடன் தனியார் மருத்துவமனைக்கு பேருந்தில் சென்றுள்ளார்.

 

பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற கலைச்செல்வி தனது பையில் பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தம் வந்த பொழுது அவர்களை கண்டதும் இரண்டு பெண்கள் தப்பி ஓட முயன்றனர்.

 

சந்தேகம் அடைந்து கலைச்செல்வி வீட்டில் இருந்தவர்களின் உதவியுடன் இரண்டு பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் இரண்டு பெண்களும் கிருஷ்ணகிரியை சேர்ந்த லட்சுமி சித்ரா என்பதும் ஏடிஎம் அட்டைகள் மற்றும் 84 ஆயிரத்து ஆயிரம் ரொக்கத்தையும் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon