புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஜி20 பிரதிநிதிகள் மாநாடு..!
ஜி 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா சீனா பிரிட்டன் ரஷ்யாவில் 20 நாடுகளில் உள்ள ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை வகிக்கிறது.
இதனையடுத்து நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி 20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் சுற்றுச்சூழல், பாதுகாப்பு தொழில்நுட்ப மேம்பாடு என்ற பெயரில் புதுச்சேரியில் இன்று, நாளை மாநாடு நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 75 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் உள்ள 42 அறிவியல் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை ஒட்டி புதுச்சேரியில் ஐந்து இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





