--- --:--:-- --

காதலுடன் சேர்ந்து மாணவி ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட சம்பவம்..!

4

பரங்கிமலை ரயில் நிலையம் அருகே காதலுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டது பத்தாம் வகுப்பு மாணவி என்பதும் காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் பிறந்தநாளில் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

 

சென்னை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் முன் காதல் ஜோடி பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதில் இளம் பெண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இது பற்றி மாமல்லம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உள்ளகரம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளங்கோவன் என்பதும் இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.

 

பலியான பெண் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிம்ரன் என்பதும் தெரிய வந்தது. இவர் ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon