முதியவர்களை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய காவல் உதவி ஆய்வாளர்..!
சென்னையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் முதியவர்களிடம் காட்டமாக நடந்து கொண்ட காவல் உதவி ஆணையா ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.
மதிய உணவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஏராளமானவர் கூடியதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் அங்கிருந்த முதியவரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி எட்டி உதைத்ததாக அங்கிருந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





