சென்னையை நோக்கி வரும் வாகனங்களால் ஸ்தம்பித்த பரனூர் சுங்கச்சாவடி..!

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் செங்கல்பட்டு மாவட்டம் பரநூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

 

இந்நிலையில் விடுமுறை முடிந்து அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமானோர் சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் திருச்சியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.