பெற்றோருக்கு மருத்துவ செலவு வைக்க கூடாது என கருதி மாணவி செய்த விபரீத முடிவு..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பெற்றோருக்கு மருத்துவ செலவு வைக்க கூடாது என கருதி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கட்டட தொழிலாளி மெய்யப்பன் – மைதிலி தம்பதியினரின் மகள் திவ்யதர்ஷினி.
இவர் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்துள்ளார். மாணவிக்கு கடந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மூக்கு கண்ணாடி அணிவிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
ஆனால் கண்ணாடி வாங்க பெற்றோரிடம் போதிய பணமில்லை என கூறப்படுகிறது. பெற்றோரின் வறுமை காரணமாக தர்ஷினி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





