--- --:--:-- --

மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணனை குத்திய தம்பி..!

6

ஓசூர் அருகே உறவினர்களுக்கு இடையேயான மோதலின் போது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஓசூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த அன்னையப்பா அவரது உடன் பிறந்த தம்பியான கிருஷ்ணப்பாவின் மருமகள் மது தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அன்னையப்பாவின் மகன் செல்லப்பா மதுவிடம் சண்டை இட்டுள்ளான்.

 

அப்பொழுது அங்கு மது போதையில் நண்பர்களுடன் வந்த மதுவின் கணவர் விஜய், செல்லப்பாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே அண்ணன் என்றும் பாராமல் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்லப்பாவை விஜய் குத்தியுள்ளார்.

 

படுகாயமடைந்த செல்லப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்து கொலைவு செய்துவிட்டு தலைமறைவான விஜய் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon