--- --:--:-- --

பிரியாணியில் கிடந்த பூரான்..! உணவகத்திற்கு சீல்..!

8

கேரளாவில் பிரியாணியில் பூரான் ஒன்று கிடந்த நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே மட்டன் சேரி உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்ற வாடிக்கையாளர் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார்.

 

அப்பொழுது அதில் பெரிய சைஸ் பூரான் ஒன்று கிடைப்பதை பார்த்து பதறிப் போன வாடிக்கையாளர் இது குறித்து புகார் அளித்தார். இதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்பொழுது சமையல் அறையில் எலிகள் அங்கும் இங்கும் ஓடியதை பார்த்து கோபம் அடைந்த அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

 

கடந்த சில நாட்களுக்கு செவிலியர் ஒருவர் பிரியாணியும் சிக்கனும் சாப்பிட்டு உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon